Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் 230,000 இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறி!

T

The Leader Desk

மார்ச் 11, 2026 • 6:14 AM

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் 230,000 இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • தற்போது ஏற்பட்டுள்ள பிரதான பாதிப்பு, இலங்கையிலிருந்து தொழிலாளர்கள் வௌிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்பட்டுள்ள பயணத் தாமதமே தவிர, வேலை ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்படவில்லை என பணியகம் தெரிவித்துள்ளது.
  • அர்ஷாத் பின்வருமாறு குறிப்பிட்டார்: "இலங்கையின் வருடாந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் 80 முதல் 90 சதவீதமானவை மத்திய கிழக்கு நாடுகளிலேயே தங்கியுள்ளன.
எழுத்து அளவு:

வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலை காரணமாக, இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து தற்பொழுது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகவர்களுக்கும் இடையில் முரண்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகளின்படி, போர்ச் சூழலால் இதுவரை எவ்வித வேலைவாய்ப்புகளும் உத்தியோகபூர்வமாக ரத்துச் செய்யப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரதான பாதிப்பு, இலங்கையிலிருந்து தொழிலாளர்கள் வௌிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்பட்டுள்ள பயணத் தாமதமே தவிர, வேலை ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்படவில்லை என பணியகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் (ALFEA) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் எம்.ஏ.எம். அர்ஷாத் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"இலங்கையின் வருடாந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் 80 முதல் 90 சதவீதமானவை மத்திய கிழக்கு நாடுகளிலேயே தங்கியுள்ளன. போர் நீடிக்குமானால், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...