Fever) நோய்த் தொற்றுக்குள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
"சலே நான்காவது மாடியில் உள்ள ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த அறை முழுவதும் எலிகள் நடமாடுவதாகக் கூறப்படுகிறது. அவர் தரையிலேயே உறங்குகின்றார். அவரது உடல் மீது எலிகள் ஓடுவதாகவும், அறை முழுவதும் எலிக் கழிவுகள் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் எலிப்பாய்ச்சல் நோய்க்கு ஆளாகும் கடுமையான அபாயம் உள்ளது" எனத் தெரிவித்தார்.
"சிறைக் கைதிகளும் மனிதர்களே" என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையில், சுரேஷ் சலேவை கௌரவமான முறையில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளை, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதில் இருந்து அவரது மகனை அவர் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை எனவும் இதன்போது குற்றம் சுமத்தப்பட்டது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே, தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


