விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 8.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 92.50 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, அமெரிக்க சந்தையிலும் மசகு எண்ணெய் விலை 9 சதவீதத்தால் குறைவடைந்து, ஒரு பீப்பாய் 88.60 டொலர்களாகக் காணப்படுகிறது.
எனினும், போர் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த விலையானது இன்னும் 30 சதவீத உயர் மட்டத்திலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
"யுத்தம் மிக விரைவில் முடிவுக்கு வரும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிவிப்பினைத் தொடர்ந்தே எண்ணெய் விலையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளிலும் புதிய புத்துயிர் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, ஜப்பானின் 'Nikkei 225' சுட்டெண் 2.8 சதவீதத்தாலும், தென் கொரியாவின் 'Kospi' சுட்டெண் 5 சதவீதத்திற்கும் அதிகமான அளவிலும் வளர்ச்சியடைந்துள்ளன.
வளைகுடா பிராந்தியத்திலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் முக்கிய நாடுகளாக ஆசிய நாடுகள் விளங்குவதால், முன்னதாக ஏற்பட்ட விலை அதிகரிப்பு சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
முன்னதாக நேற்று (09), உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 25 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்தது. இது 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் பதிவான உச்ச விலையாகும். நேற்றைய தினம் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் 27 சதவீதத்தால் அதிகரித்து 117.65 டொலர்களாகக் காணப்பட்டது.
இது வரலாற்றில் ஒரே நாளில் பதிவான மிகப்பெரிய விலை அதிகரிப்பாகக் கருதப்படுகிறது. அதேபோல், அமெரிக்க WTI மசகு எண்ணெய் விலையும் 28.3 சதவீதத்தால் உயர்ந்து 116.62 டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
இதேவேளை, சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் நெருக்கடிக்குத் தீர்வாக, சர்வதேச எரிசக்தி முகவர் நிலையம் (IEA) 300 மில்லியன் பீப்பாய் மසகு எண்ணெயை அவசரகாலத் தேவைகளுக்காக விடுவிக்க முன்மொழிந்துள்ளது.
G7 நாடுகளின் நிதியமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மසகு எண்ணெய் விலை 110 டொலர்களைக் கடந்துள்ள நிலையில், விலைக் கட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடை செய்ய முயன்றால் “அக்னியும் கோபமும்” (Fire and Fury) போன்ற கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட அச்சம் குறைந்ததால் எண்ணெய் விலைகள் திடீரென சரிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கியமான பாதையாக கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படலாம் என்ற அச்சம் கடந்த நாட்களில் எண்ணெய் விலையை ஒரு கட்டத்தில் ஒரு பீப்பாய்க்கு 119 டாலர் வரை உயர்த்தியது.
ஆனால், ஈரான் எண்ணெய் போக்குவரத்தைக் குறுக்கிட்டால் அமெரிக்கா “இதுவரை விட 20 மடங்கு கடுமையாக” பதிலடி கொடுக்கும் என டிரம்ப் சமூக வலைதளத்தில் எச்சரித்ததைத் தொடர்ந்து சந்தையில் பதற்றம் குறைந்ததாக கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை உலகளவில் கடல் வழியாக அனுப்பப்படும் எண்ணெயின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கியமான கடல் பாதையாக கருதப்படுகிறது. அந்த பாதையில் ஏற்பட்ட எந்தத் தடையும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடர்புடைய செய்தி:


