Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மின்சாரசபை தொழிற்சங்கப் போராட்டம்: கொழும்பு கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை!

T

The Leader Desk

மார்ச் 10, 2026 • 4:03 AM

மின்சாரசபை தொழிற்சங்கப் போராட்டம்: கொழும்பு கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்குச் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
  • இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்த பின்னர், புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் போது முறையான நியமனக் கடிதங்களை வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • நேற்று (09) மாலை 3 மணிக்கு ஆரம்பமான இந்த 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எழுத்து அளவு:

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்குச் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்த பின்னர், புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் போது முறையான நியமனக் கடிதங்களை வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) மாலை 3 மணிக்கு ஆரம்பமான இந்த 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மின்சார சபையை கலைத்து புதிய நிறுவனங்களின் கீழ் கொண்டுவருவதன் மூலம் ஊழியர்களின் உரிமைகளுக்கோ அல்லது சலுகைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு செயலணியின் தலைவர் புபுது நிரோஷன சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...