Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்!

T

The Leader Desk

ஜனவரி 20, 2021 • 2:49 PM

10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையில் சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியாக நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி 18, 2021 திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய சைகை மொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாக அங்கீகரிப்பதற்காக 2010 செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • இலங்கை காது கேளாதோர் சங்கத்தின் தகவலுக்கு அமைய, நாட்டில் 300,000ற்கும் மேற்பட்ட காது கேளாதோர் உள்ளனர்.
  • காது கேளாதோருக்கான இலங்கை கிரிக்கெட் அணி 2018ஆம் ஆண்டில் காது கேளாதோருக்கான சர்வதேச கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், ஐந்து நாடுகளை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது.
எழுத்து அளவு:

இலங்கையில் சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியாக நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி 18, 2021 திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய சைகை மொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாக அங்கீகரிப்பதற்காக 2010 செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சைகை மொழியை ஒரு முறையான தகவல்தொடர்பு வழிமுறையாக அங்கீகரிப்பதற்கும், சைகை மொழியை முறையான தொடர்பாடல் ஊடகமாக அங்கீகரிப்பதற்கும், பொருத்தமான வகையில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தேவையான ஏற்பாடுகளை தயாரிப்பதற்கும், அதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இலங்கையில் குறிப்பிடத்தக்களவு செவிப்புலனற்றவர்கள் வாழ்கின்றமையால், அவர்களுடைய கல்வி தேவைகள், சட்ட அணுகுமுறைகள், சுகாதார வசதிகள், பலதரப்பட்ட அரச சேவைகள் மற்றும் தனியார் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட தொடர்பாடல் ஊடகமாக ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பதன் மூலம் செவிப்புலனற்ற சமூகத்தவர்களை வலுவூட்ட முடியும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை காது கேளாதோர் சங்கத்தின் தகவலுக்கு அமைய, நாட்டில் 300,000ற்கும் மேற்பட்ட காது கேளாதோர் உள்ளனர்.

காது கேளாதோருக்கான இலங்கை கிரிக்கெட் அணி 2018ஆம் ஆண்டில் காது கேளாதோருக்கான சர்வதேச கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், ஐந்து நாடுகளை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்! | Tamil Leader | We Lead the Nation