கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, சந்தையில் விற்பனை செய்யப்படும் எரிபொருட்களின் புதிய விலைப் பட்டியல் வருமாறு:

உலக சந்தையில் மசகு எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள பின்னணியில், உள்நாட்டிலும் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க - இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் சுமார் 8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன. இது 2022 ஆம் ஆண்டிற்குப் பின்னரான அதிகூடிய விலையேற்றம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
ஈரானின் புதிய உயரிய தலைவராக முஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) பொறுப்பேற்றுள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அற்றுப்போயுள்ளது. இதன் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தளம்பல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரெண்ட் (Brent) எண்ணெய்: ஒரு பீப்பாய் 99.90 டொலர்களாக உயர்ந்துள்ளது.
ஹோமுஸ் நீரிணை (Strait of Hormuz): குறித்த நீரிணை ஊடாக முன்னெடுக்கப்படும் விநியோகங்கள் தடைப்பட்டுள்ளமையால், சவூதி ஆராம்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் தமது உற்பத்திகளை மட்டுப்படுத்தியுள்ளன.


