Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

குணமடைந்த 22 ஈரானியக் கடற்படையினர், கொக்கல விமானப்படைத் தளத்துக்கு இடமாற்றம்!

T

The Leader Desk

மார்ச் 8, 2026 • 5:49 AM

குணமடைந்த 22 ஈரானியக் கடற்படையினர், கொக்கல விமானப்படைத் தளத்துக்கு இடமாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடற்படையினர் கொக்கல விமானப்படைத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக்குழுவினர் கரைக்கு அழைத்து வந்திருந்தனர்.
  • அவர்கள் சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 10 பேர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலி தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டன.
எழுத்து அளவு:

கடற்படையினர் கொக்கல விமானப்படைத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக்குழுவினர் கரைக்கு அழைத்து வந்திருந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 10 பேர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலி தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரானிய கடற்படையினரில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலான் 2026' (MILAN 2026) கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' போர்க்கப்பல், அண்மையில் பாணந்துறைக்கு அப்பாலுள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) வருகை தந்திருந்தது.

அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அக்கப்பலின் ஊழியர்கள் உள்ளிட்ட 204 கடற்படையினரை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களுள் 53 அதிகாரிகள், 54 கெடட் (Cadet) அதிகாரிகள், 48 சிரேஷ்ட கடற்படையினர் மற்றும் 23 கடற்படையினர் உள்ளடங்கியிருந்தனர். இவ்வாறு கரைக்கு அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வெலிசர கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குணமடைந்த 22 ஈரானியக் கடற்படையினர், கொக்கல விமானப்படைத் தளத்துக்கு இடமாற்றம்! | Tamil Leader | We Lead the Nation