கருதப்படாமல் நாட்டின் அபிவிருத்தியில் செயற்திறன்மிக்க பங்காளர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்குரிய கௌரவத்தையும் வாய்ப்புகளையும் வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் இவ்வருடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமியருக்கான உரிமைகள், நீதி மற்றும் செயற்பாடு” (Rights. Justice. Action. For ALL Women and Girls) எனும் உலகளாவிய கருப்பொருளை வலியுறுத்தியுள்ள அவர், பெண்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் ஆற்றும் பணி இன்று ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தீர்க்கமான காரணியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தின் ஊடாகப் பெண்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர், இல்லத்தரசியாக அவர்கள் வழங்கும் பொருளாதாரப் பங்களிப்பைப் பாராட்டுவதுடன், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், சுயதொழில்களில் ஈடுபடுவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுப் போக்குவரத்து, பணித்தலம் மற்றும் குடும்பத்திற்குள் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், தேசிய மட்டத்திலிருந்து பிரதேச மட்டம் வரையிலான தீர்மானம் எடுக்கும் நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்குத் தேவையான பின்னணியை உருவாக்குவதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் என்பவர்கள் பரிதாபத்தை எதிர்பார்ப்பவர்கள் அல்ல, அவர்கள் புத்திசாலித்தனம், சகிப்புத்தன்மை மற்றும் படைப்பாற்றல் மிக்க சமூகப் பங்காளிகள் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், ஒரு பெண் அச்சமின்றி வீதியில் பயணிக்கக்கூடிய, அவளது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடிய மற்றும் கௌரவமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு "வளமான நாட்டை" உருவாக்குவதே தனது நோக்கம் என வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து இலங்கை பெண்களினதும் நற் கனவுகள் நனவாகும், அவர்களது பெருமையை உலகுக்கு பறைசாற்றும் ஒரு புதிய யுகத்தின் ஆரம்பமாக இந்த மகளிர் தினம் அமையட்டும் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் பிரார்த்தித்துள்ளார்.


