சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கமைய, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை நேற்றுடன் (06) ஒப்பிடுகையில் 9 சதவீதத்தினால் (9%) அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 93 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
உலகச் சந்தையில் இவ்வாறு எண்ணெய் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமை கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் பதிவான முதலாவது சந்தர்ப்பமாகும்.
இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் - நவம்பர் காலப்பகுதியிலேயே கச்சா எண்ணெய் விலை இவ்வாறு உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


