ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது பண்டார் அப்பாஸ் நகரிலிருந்து 74 கிலோமீற்றர் மேற்கே, நிலப்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்த மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஈரானில் கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். கடந்த செவ்வாய்க்கிழமை, ஈரானின் பார்ஸ் (Fars) மாகாணத்திலுள்ள கெராஷ் (Gerash) பகுதியில் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
முந்தைய நிலநடுக்கமும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்திலேயே இடம்பெற்றிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.


