Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

T

The Leader Desk

மார்ச் 7, 2026 • 4:21 AM

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடயத்தில் மேலதிக அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • வடக்கு இஸ்ரேலில் சுமார் 9,000க்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; "ஹிஸ்புல்லா அமைப்பினால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

விடயத்தில் மேலதிக அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

"ஹிஸ்புல்லா அமைப்பினால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்."

அவதானம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதிகள்:

ஹைபா (Haifa), நஹாரியா (Nahariya), அக்கோ (Akko), கலிலி (Galilee), அபுலா (Afula), கார்மல் மலைத்தொடர் (Carmel), நசரேத் (Nazareth) மற்றும் திபேரியா (Tiberias) உள்ளிட்ட வடக்கு பிராந்தியங்களில் வசிக்கும் இலங்கையர்கள், லெபனான் எல்லையிலிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகள் மற்றும் உள்நாட்டில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு இஸ்ரேலில் சுமார் 9,000க்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், அரச ஊடகங்கள், PIBA நிறுவனம் மற்றும் இலங்கை தூதரகம் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டல்களை உடனுக்குடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாக்குதல் அபாயங்களின் போது இஸ்ரேலிய அம்பியூலன்ஸ் (Ambulance) சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

அவசர தொடர்புகளுக்கு:

ஏதேனும் அவசர உதவி தேவைப்படின், உங்கள் இருப்பிடத்தை (Location) குறிப்பிட்டு பின்வரும் இலக்கங்களைத் தொடர்பு கொள்ளவும்:

இஸ்ரேலிய அவசர முதலுதவி சேவை: 101

இலங்கை தூதரகத்தின் WhatsApp இலக்கம்: 00972-559305731
(வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...