Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஈரான் கடற்படையினரிலிருந்து 5 பேர் வெலிசர கடற்படை மருத்துவமனைக்கு மாற்றம்!

T

The Leader Desk

மார்ச் 6, 2026 • 10:48 PM

ஈரான் கடற்படையினரிலிருந்து 5 பேர் வெலிசர கடற்படை மருத்துவமனைக்கு மாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளியேற்றப்பட்டதாக மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
  • மீதமுள்ள 27 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுள் சிலரை நாளையளவில் வெளியேற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • ஈரானுக்குச் சொந்தமான IRINS Bushehr கப்பலில் இருந்த 204 பேரை வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
  • அவர்கள் முதலில் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வெலிசர கடற்படை முகாமிற்கு மாற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வெளியேற்றப்பட்டதாக மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மீதமுள்ள 27 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுள் சிலரை நாளையளவில் வெளியேற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதி பெற்ற ஐந்து கடற்படையினரும், ஈரான் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை கடற்படையால் வெலிசர கடற்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்த கப்பலை திருகோணமலை துறைமுகம் அருகே கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்குச் சொந்தமான IRINS Bushehr கப்பலில் இருந்த 204 பேரை வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்கள் முதலில் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வெலிசர கடற்படை முகாமிற்கு மாற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

அதேவேளை, கப்பலின் பணியாளர்கள் இன்னும் கப்பலிலேயே உள்ளதாகவும் அவர் கூறினார். அவர்களை கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வந்து பின்னர் வெலிசர கடற்படை முகாமிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை கடற்படை பணியாளர்களின் மேற்பார்வையில் அந்தக் கப்பலை இன்று திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRINS Bushehr கப்பல் இலங்கைக்கு வர அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து மனிதாபிமானக் கொள்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலங்கைக்கு நுழைய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டதாக நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஈரான் கடற்படையினரிலிருந்து 5 பேர் வெலிசர கடற்படை மருத்துவமனைக்கு மாற்றம்! | Tamil Leader | We Lead the Nation