பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், கடல் எல்லைக்கு அருகில் இருந்த அந்தக் கப்பலில் இருந்து பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
இந்த விவகாரம் குறித்து நேற்று (05) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்ததாவது, குறித்த IRIS Bushehr கப்பலை பின்னர் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், அந்தக் கப்பலில் மொத்தமாக 208 பேர் கொண்ட கப்பற்படை பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


