நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இது குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு:
இலங்கையில் ஓரினச்சேர்க்கை சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் (Desha Hithaishi Jathika Vyaparaya) அழைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர்களில் ஒருவரான வைத்தியர் வசந்த பண்டார நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.


