180 பேர் பயணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு:
குறித்த கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக இன்று அதிகாலை 5.08 மணியளவில் கடற்படைக்குக் கிடைத்த தகவலையடுத்து உடனடி மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதுவரை 32 பேர் மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற பகுதியில் தேடுதல் பணிகளை முன்னெடுப்பதற்காக விமானப்படையின் கண்காணிப்பு விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் இடம்பெறவில்லை என்ற போதிலும், உயிர்களைக் காப்பாற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின்படி இலங்கை கடற்படை இந்த மனிதாபிமான மீட்புப் பணியை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் சபையில் சுட்டிக்காட்டினார்.
மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்கு கராபிட்டிய வைத்தியசாலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


