Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஈரான் பாடசாலை மீதான தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கு இறுதிச்சடங்கு; பெற்றோர் கண்ணீர் அஞ்சலி!

T

The Leader Desk

மார்ச் 4, 2026 • 7:30 AM

ஈரான் பாடசாலை மீதான தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கு இறுதிச்சடங்கு; பெற்றோர் கண்ணீர் அஞ்சலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன.
  • மினாப் நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • இது ஒரு ஐஆர்ஜிசி தளத்திலிருந்து சுமார் 600 மீற்றர் (1970 அடி) தொலைவில் அமைந்திருந்தது.
  • அப்படி என்றால், தாக்குதல் நடந்தபோது பள்ளியில் மாணவர்கள் இருந்திருக்கக் கூடும்.
எழுத்து அளவு:

சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

மினாப் நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானின் இராணுவத் தளங்கள் மற்றும் தலைமையை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் பரவலான தாக்குதல்களை நடத்தியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ள உயிரிழப்பு எண்ணிக்கையை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. அந்தப் பாடசாலை, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளத்திற்கு அருகில் அமைந்திருந்தது.

இந்தச் சம்பவம் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம், அந்தப் பகுதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் "தெரியவில்லை" என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த இறுதிச் சடங்கில், நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்டனர்.

தங்கள் மகள்களை இழந்த தாய்மார்கள் மற்றும் தந்தையரின் துயரத்தை பின்னணியில் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்க, இஸ்லாமியக் குடியரசின் தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் கூட்டத்திற்கு நடுவே சுமந்து செல்லப்பட்டன.

சனிக்கிழமை காலை பாடசாலையை மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு ஐஆர்ஜிசி தளத்திலிருந்து சுமார் 600 மீற்றர் (1970 அடி) தொலைவில் அமைந்திருந்தது.

ஈரானில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான ஆறு நாட்கள் வேலை நாட்களாகும், வெள்ளிக்கிழமை மட்டுமே அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாகும். அப்படி என்றால், தாக்குதல் நடந்தபோது பள்ளியில் மாணவர்கள் இருந்திருக்கக் கூடும்.

இந்தச் சம்பவத்தை "காட்டுமிராண்டித்தனமான செயல்" என்றும், "ஆக்கிரமிப்பாளர்கள் செய்த எண்ணற்ற குற்றங்களின் பதிவில் மற்றொரு கருப்புப் பக்கம்" என்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் அழைத்தார்.

நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, 160 பேருக்காகக் கல்லறைகள் தோண்டப்படும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, " டிரம்ப் வாக்குறுதி அளித்த 'மீட்பு' என்பது உண்மையில் இப்படித்தான் இருக்கிறது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

வெடிப்புச் சம்பவத்திற்குப் பிந்தைய காட்சிகளை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோக்களில், மக்கள் பீதியில் அலறிக் கொண்டிருக்க, ஒரு கட்டிடத்திலிருந்து புகை எழுவதும் அதன் அருகே மக்கள் கூடி நிற்பதும் தெரிகிறது.

பள்ளியை அமெரிக்க ஏவுகணை தாக்கியதா? ரூபியோ பதில்
சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஈரானுக்குள் சென்று தகவல்களைச் சேகரிப்பதை, அந்நாடு விசா வழங்க மறுப்பது கடுமையாகக் மட்டுப்படுத்துகிறது.

திங்களன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், அந்தப் பள்ளி கட்டடம் அமெரிக்க ஏவுகணையால் தாக்கப்பட்டதா என்று பிபிசி கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த ரூபியோ, "அமெரிக்கா வேண்டுமென்றே ஒரு பள்ளியை இலக்கு வைக்காது. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, சொல்லப் போனால் அதற்கான தூண்டுதலும் இல்லை,ஷ" என்று கூறினார்.

"எதனால் இது நடந்தது என்பது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை, ஆனால் அமெரிக்கா ஒரு பள்ளியை இலக்கு வைக்காது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ஊடகங்களில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மைய செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், "இந்த அறிக்கைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்" என்றார்.

"பொதுமக்களை பாதுகாப்பது மிக முக்கியமானது, எதிர்பாராத பாதிப்புகளை குறைக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்"எனவும் அவர் கூறினார்.

  • பிபிசி
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...