Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

'இரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் நிலா'; உலகம் முழுவதும் தென்பட்ட சந்திர கிரகணத்தின் காட்சிகள்!

T

The Leader Desk

மார்ச் 4, 2026 • 7:17 AM

'இரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் நிலா'; உலகம் முழுவதும் தென்பட்ட சந்திர கிரகணத்தின் காட்சிகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பகுதிகளில் முழு நிலவு மிகவும் அரிதான முழு சந்திர கிரகணத்துடன் இணைந்து வருகிறது.
  • பிபிசி 01. பிரிட்டனின் வடக்கு டைன்சைடில் உள்ள டைன்மவுத்தில் அடர்மஞ்சள் நிறத்தில் தென்பட்ட வார்ம் மூன்.
  • பனாமா நகரத்தின் மீது முழு சந்திர கிரகணத்தின்போது தோன்றிய முழு நிலவு 09. இந்தியாவின் அசாமில் உள்ள கோலாகாட்டின் தென்பட்ட முழு சந்திர கிரகணம்.
எழுத்து அளவு:

பகுதிகளில் முழு நிலவு மிகவும் அரிதான முழு சந்திர கிரகணத்துடன் இணைந்து வருகிறது. இந்த நேரத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.

முழு நிலவுக்கு நவீன நாட்காட்டிகள் பயன்படுத்தப்படுவதற்கு முன்பான பண்டைய பாரம்பரியத்துடன் தொடர்புடைய பெயர்கள் உள்ளன. மாறி வரும் பருவத்தைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டன.

மார்ச் மாதத்தில் வரும் முழு நிலவு 'வார்ம் மூன்' (worm moon) என்று அழைக்கப்படுகிறது. இளவேனிற்காலத்தில் வானிலை வெப்பமடைவதால் மண்புழுக்கள் மண்ணிலிருந்து வெளியே வருவதை அது குறிக்கிறது.

உலகின் சில பகுதிகளில் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டதால் முழு நிலவு தென்பட்டது. இது ப்ளட் மூன் (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது. சூரியன் மற்றும் நிலவுக்கு இடையே பூமி வருகிறபோது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் நிலவின் மேற்பரப்பில் நிழல் விழுகிறது.

முழு சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பு நிறமாக மாறுகிறது. ஏனெனில், பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை வளைத்து சிவப்பு அலைகளை மட்டுமே அனுமதித்து ஒளியூட்டுகிறது.

- பிபிசி

01. பிரிட்டனின் வடக்கு டைன்சைடில் உள்ள டைன்மவுத்தில் அடர்மஞ்சள் நிறத்தில் தென்பட்ட வார்ம் மூன்.

Briton.webp

 

02. பிரிட்டனின் சண்டர்லாந்தில் உள்ள பென்ஷா நினைவுச் சின்னத்தின் வலது பக்கத்தில் வார்ம் மூன் தென்பட்டது.

d4766d90-1711-11f1-801d-ed3cff6bf876.jpg.webp

 

03. சீனாவின் பெய்ஜிங்கில் முழு சந்திர கிரகணம் தோன்ற ஆரம்பித்த காட்சி.

f9f32360-1711-11f1-801d-ed3cff6bf876.png.webp

 

04. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வார்ம் மூன் தென்பட்ட காட்சி.

4fddc460-1712-11f1-801d-ed3cff6bf876.jpg.webp

 

05. நியூசிலாந்தில் முழு சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பு நிறத்தில் தோற்றமளித்த காட்சி.

a5c30e30-1712-11f1-a977-831dd3cb5c6e.jpg.webp

 

06. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சார் ரஃபேலின் வடக்குப் பகுதியில் தென்பட்ட முழு சந்திர கிரகணம்.

e64cf790-1712-11f1-a977-831dd3cb5c6e.jpg.webp

 

07. கனடாவின் டொரண்டோவில் தென்பட்ட முழு சந்திர கிரகணம்.

21eaf5e0-1713-11f1-801d-ed3cff6bf876.jpg.webp

 

08. பனாமா நகரத்தின் மீது முழு சந்திர கிரகணத்தின்போது தோன்றிய முழு நிலவு

6b31f690-1713-11f1-a977-831dd3cb5c6e.jpg.webp

 

09. இந்தியாவின் அசாமில் உள்ள கோலாகாட்டின் தென்பட்ட முழு சந்திர கிரகணம்.

1e369910-1716-11f1-befc-09f0999a306b.jpg.webp

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...