திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் ஈரானில் 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 181 பேர் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5,402 ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் 100 பேர் சிறுவர்கள் எனவும் HRANA செய்தி நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் குறைந்தபட்சம் 104 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம்கள், மருத்துவ நிலையங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதிவாகியுள்ள மேலும் நூற்றுக்கணக்கான மரணங்கள் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறித்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


