இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 79 பேர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு 118, 197 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கென இணையத்தளங்கள் மற்றும் 11 விசேட விசாரணைப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் ஊழலை ஒழிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், முறைகேடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு நேரடியாக அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாடு முழுவதும் 608 பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருவதாகவும், மொத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 79,782 என்றும் அவர் தெரிவித்தார். இதில் 71,424 சாதாரண சேவை அதிகாரிகளும், 7,256 விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளும் மற்றும் உதவி சேவை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் விளக்கமளித்தார்.
பொலிஸ் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது சுமார் 17,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.
இதற்கமைய, 325 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 6,530 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்டோர் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். மேலதிகமாக, பொலிஸ் சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 10,000 சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களை பொலிஸ் சேவையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு கொடுப்பனவாக 25,200 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


