கட்டியெழுப்புவதற்காக தகுந்த அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (03) நாடாளுமன்றத்தில் மத்திய கிழக்கு போர் சூழல் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"எந்தவொரு போரும் எந்தவொரு மக்கட் குழுமத்திற்கும் சாதகமான சூழலை உருவாக்குவதில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அதிநவீன ஆயுதங்கள் தயாரிக்கப்படும் இக்காலத்தில், போர் எவ்வளவு பேரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
“எனவே, இந்த போருடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அமைதியான உலகை நோக்கிய அர்ப்பணிப்பையும் வழிகாட்டல்களையும் முன்னெடுக்க வேண்டுமென்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்" என்று குறிப்பிட்டார்.
இன்றையதினம் வெளிநாட்டுச் செலாவணி சட்டம் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று (03) விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது.
அதேபோல், நாளை (04) நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒத்திவைப்பு வேளை விவாதம் ஒன்றினை எதிர்வரும் 5ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து, விசே உரையாற்றினார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!
T
The Leader Desk
மார்ச் 3, 2026 • 6:19 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கட்டியெழுப்புவதற்காக தகுந்த அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
- இன்று (03) நாடாளுமன்றத்தில் மத்திய கிழக்கு போர் சூழல் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
- இன்றையதினம் வெளிநாட்டுச் செலாவணி சட்டம் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது.
- இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று (03) விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

