காமெனி அவர்களின் மனைவி மன்சூரே கொஜாஸ்தே பகெர்சாதே (Mansoureh Khojasteh Bagherzadeh) உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரான் அரசின் Press TV சேனல் வெளியிட்ட செய்தியில், குறித்த தாக்குதலுக்கு பின்னர் அவர் “தியாகி” (Martyrdom) ஆகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, பகெர்சாதே கோமா நிலையில் உள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த சனிக்கிழமை (பெப்ரவரி 28) இடம்பெற்ற அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களில் அயத்துல்லா அலி காமெனெய், அவரது மகள், மருமகன் மற்றும் பேரனும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமெனி மற்றும் அவரது மனைவிக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.


