Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

T

The Leader Desk

மே 4, 2023 • 8:57 AM

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பணிப்புரை விடுத்துள்ளார்.
  • இதன் பிரகாரம் மேற்படி 03 தினங்களும் கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
  • அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர்களது இணக்கப்பாட்டுடன் கட்டுப்பாட்டு விலை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டிருந்தது.
  • இதன்படி, ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2,000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கபட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1,800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பணிப்புரை விடுத்துள்ளார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடு முழுவதும் 04ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையான 03 நாட்களுக்கு மாடு, ஆடு மற்றும் கோழி என்பன அறுத்து, விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மேற்படி 03 தினங்களும் கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை மணல்சேனை மருதமுனை பெரியநீலாவணை பாண்டிருப்பு சாய்ந்தமருது கல்முனை மாநகர பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை, கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு சில இறைச்சிக்கடை உரிமையாளர்கள் உதாசீனமாக செயற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர்களது இணக்கப்பாட்டுடன் கட்டுப்பாட்டு விலை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2,000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கபட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1,800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

ஆனால் ,சில இறைச்சி கடை உரிமையாளர்கள் குறித்த கட்டுப்பாட்டு விலையை மீறி தான்தோன்றித்தனமாக விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • அம்பாறை நிருபர் ஷிஹான்-
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...