Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

'ஊடகவியலாளர்கள் மீதான கொடூரங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்!'

T

The Leader Desk

மார்ச் 2, 2026 • 6:45 AM

'ஊடகவியலாளர்கள் மீதான கொடூரங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆனைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும், "பாரதி ஒரு மனிதாபிமான ஊடகன்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது.
எழுத்து அளவு:

உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆனைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும், "பாரதி ஒரு மனிதாபிமான ஊடகன்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் எம்.பி. இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

"யுத்த காலத்திலும் பின்னரும் ஊடகவியலாளர்கள் - குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்கள் - சொல்லொணாக் கொடூரங்களையும், துன்ப துயரங்களையும், அடாவடித்தனங்களையும் எதிர்கொண்டனர். பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமலாக்கப்பட்டனர். அவர்கள் எவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

தமிழ் ஊடகவியலாளர்கள் என்று இல்லை, சிங்கள ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் கூட கொடூரங்கள் இழைக்கப்பட்டன. படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை தொடர்பில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. நீதி, நேர்மையான புலனாய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. குற்றம் இழைத்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

ஆகவே இவை பற்றி எல்லாம் விசாரிப்பதற்குத் தனியான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்க வேண்டும். அப்படி நியமித்தால் பல உண்மைகளை வெளிக்கொணர வாய்ப்புக் கிட்டும்.

படைத் தரப்பில், புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விடயங்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.

ஆகவே சிறுபான்மையினரின் கட்சிகள் ஒன்றிணைந்து இத்தகைய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுவதற்கு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Hak111.png

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...