Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மத்திய கிழக்கு போரை இலங்கை அரசு உன்னிப்பாக கண்காணிப்பு; மோதல்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தல்!

T

The Leader Desk

மார்ச் 2, 2026 • 6:30 AM

மத்திய கிழக்கு போரை இலங்கை அரசு உன்னிப்பாக கண்காணிப்பு; மோதல்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போரை எவ்விதத்திலும் ஆதரிக்காது என்றும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
  • அந்தப் பகுதி பாதிக்கப்படக் கூடாது,” என அவர் தெரிவித்தார்.
  • தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களாக பணியாற்றி வருவதாகவும், அப்பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
  • இந்த நீட்டிப்பு 14 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும், நிலைமைக்கு ஏற்ப இத்தீர்மானம் மீளாய்வு செய்யப்படும் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எழுத்து அளவு:

போரை எவ்விதத்திலும் ஆதரிக்காது என்றும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை தொடர்பாக நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் உடனடியாக மோதல்களை நிறுத்தி, உலக அமைதியை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

“மத்திய கிழக்கு உலகின் முக்கிய பிராந்தியமாகும். அது எங்கள் பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புடையது. அந்தப் பகுதி பாதிக்கப்படக் கூடாது,” என அவர் தெரிவித்தார்.

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களாக பணியாற்றி வருவதாகவும், அப்பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், உடனடி வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்வது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தூதரக சேவைகள் மற்றும் அவசர உதவிகளுக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது:

வெளிவிவகார அமைச்சு: 0094 742595546

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE): 0094 719802822

ஹாட்லைன்: 1989

இதற்கிடையில், தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கான விசாக்களை கட்டணமின்றி இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நீட்டிப்பு 14 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும், நிலைமைக்கு ஏற்ப இத்தீர்மானம் மீளாய்வு செய்யப்படும் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும், தங்களது நாடுகளுக்கு திரும்ப விரும்பும் பயணிகளுக்காக மாற்று விமானப் பாதைகளை அமைப்பது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...