தொகுதியொன்றில் நேற்று (28) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால், 10 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் குடியிருப்புத் தொகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ, காற்றின் வேகத்தினால் ஏனைய வீடுகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து மேற்கொண்ட நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இத்தீ விபத்தினால் 10 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 35 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளிலும், தோட்டப் பாடசாலை கட்டடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை தோட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தீ விபத்தினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்தமான பெறுமதியான வீட்டு உபகரணங்கள் மற்றும் உடமைகள் பெருமளவில் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், மின்சாரக் கசிவு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக விசாரணைகளை முன்னெடுக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். தீயினால் ஏற்பட்ட மொத்தச் சொத்து இழப்பு தொடர்பான மதிப்பீடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


