பிராந்தியத்தின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இந்த மோதல்களின் விளைவாக, டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் புகழ்பெற்ற 'புர்ஜ் அல் அரபு' (Burj Al Arab) ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய இடங்கள் சேதமடைந்துள்ளன.
விமான நிலையம்:
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) ஒரு பகுதி இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் விமான நிலைய ஊழியர்கள் நால்வர் காயமடைந்துள்ளதாகத் துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
புர்ஜ் அல் அரபு:
வான்பரப்பில் வைத்து இடைமறிக்கப்பட்ட ட்ரோன் ஒன்றின் சிதைவுகள் விழுந்ததில், 'புர்ஜ் அல் அரபு' ஹோட்டலின் வெளிப்பகுதியில் சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஜெபல் அலி துறைமுகம்:
துறைமுகத்தின் ஒரு முனையத்திலும் ட்ரோன் சிதைவுகள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் தற்போதைய நிலை:
ஈரான் ஏவிய ஏவுகணைகள் அபுதாபி, துபாய் மற்றும் கட்டாரின் தோஹா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை இலக்கு வைத்தன.
அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒரு ஆசியப் பிரஜை உயிரிழந்துள்ளார்.
மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போர் பதற்றம் நிலவுவதால், பெரும்பாலான வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சர்வதேச மற்றும் பிராந்திய விமான சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், அவசர அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அந்நாட்டு அரசாங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சர்வதேச மற்றும் இராணுவ நகர்வுகள்:
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமனேயின் மரணத்தை ஈரானிய அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மேலதிகத் தாக்குதல்களைத் தொடர்ந்தால், கற்பனை செய்ய முடியாத பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC), இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் இந்த அசாதாரண சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.


