Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட அறிவிப்பு!

T

The Leader Desk

மார்ச் 1, 2026 • 4:44 AM

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிப் புறப்படவிருந்த அனைத்து விமான சேவைகளும் இன்று (01) மாலை 5.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
  • இது குறித்து கருத்துத் தெரிவித்த கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேரப் பொறுப்பதிகாரி, இன்று காலை 6.15 மணி வரை வருகை தரவிருந்த 18 விமானங்களும், புறப்படவிருந்த 25 விமானங்களும் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
  • நேற்று (28) நண்பகல் கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்ட 'பிட்ஸ் ஏர்' (FitsAir) மற்றும் 'ஏர் அரேபியா' (Air Arabia) ஆகிய விமானங்களும், வான்பரப்பு முடக்கத்தினால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கே திருப்பி வரவழைக்கப்பட்டுள்ளன.
  • அத்துடன், தமது மின்னஞ்சல் (Email) மற்றும் குறுஞ்செய்திகளை (SMS) தொடர்ச்சியாகக் கண்காணிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எழுத்து அளவு:

நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிப் புறப்படவிருந்த அனைத்து விமான சேவைகளும் இன்று (01) மாலை 5.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேரப் பொறுப்பதிகாரி, இன்று காலை 6.15 மணி வரை வருகை தரவிருந்த 18 விமானங்களும், புறப்படவிருந்த 25 விமானங்களும் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று (28) நண்பகல் கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்ட 'பிட்ஸ் ஏர்' (FitsAir) மற்றும் 'ஏர் அரேபியா' (Air Arabia) ஆகிய விமானங்களும், வான்பரப்பு முடக்கத்தினால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கே திருப்பி வரவழைக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்:
மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது அந்த வான்பரப்பு ஊடாக ஏனைய நாடுகளுக்கோ பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னதாக தத்தமது விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன், தமது மின்னஞ்சல் (Email) மற்றும் குறுஞ்செய்திகளை (SMS) தொடர்ச்சியாகக் கண்காணிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

விசா கால அவகாசம் நீடிப்பு:
இதற்கிடையில், நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கு, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் 7 நாட்கள் விசா சலுகைக் காலத்தை வழங்கத் தீர்மானித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்ட போதிலும், அவுஸ்திரேலியா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, தாய்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட அறிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation