இலங்கை பல்கலைக்கழக நூலகர்கள்

சங்கமானது - அரச பல்கலைக்கழக அமைப்பில் இணைந்திருக்கும் கல்விசார் நூலகர்களின் தொழில்சார் வளர்ச்சிக்கான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 

இது கல்விசார் நூலகர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்கமாகவும் செயற்படுகிறது. 
 
42ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் 
2024 அக்டோபர் 30ஆம் திகதி சங்கத்தின் தலைவர் கலாநிதி; எம்.எம். மஸ்றூபா தலைமையில் கொழும்புப் பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் கே.டி. கருணாரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 
 
அவர் ஆற்றிய உரையில், 
 
 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் பல்கலைக்கழக நூலகர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். 
 
சங்கத்தின் இளம் உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியைக் கருத்தில் கொள்வதுடன், நிறுவனம் வளர்ச்சியடைய தேவையான பங்களிப்புகளை செய்வது அவசியம் என்றும் அறிவுறுத்தினார். 
 
சங்கத்தின் தலைவர் கலாநிதி; எம்.எம். மஸ்றூபா பின்வரும் முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.
 
IMG 20241104 135144 800 x 533 pixel
 
1. தொடக்க சொற்பொழிவு -  கொழும்புப் பல்கலைக்கழக துணை நூலகர் கலாநிதி சி.சி. குருப்பு நிகழ்த்தப்பட்டது.
 
2. இவ்வாண்டின் மிகவும் சிறந்த புதுமையாளர்களுக்கான விருது நூலகம் மற்றும் தகவல் அறிவியல்; பேராசிரியர் ருவன் கமகே மற்றும் கலாநிதி; பிரியன்வதாவுக்கு வழங்கப்பட்டது.
 
3. ஓய்வு பெற்ற மூத்த உதவி நூலகர்
 எம்.ஏ. மில்டன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
 
4. பல்கலைக்கழக நூலகர்கள் சங்கத்தின் ஆராய்ச்சி இதழ் - பிரதம ஆசிரியர் 
 ஏ.எம். நஹ்ஃபீஸால் கையளிக்கப்பட்டது.
 
IMG 20241104 135244 800 x 533 pixel
 
5. பொதுச் செயலாளர் எம்.சி.எம். அஸ்வரால் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
 
6. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி கணக்கறிக்கையை 
எஸ்.எல்.எம். சஜீர் அறிவித்தார்.
 
தொடர்ந்து 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது. 
 
சங்கத்தின் உதவி செயலாளர் 
 துசாரா வனசிங்க 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை பல்கலைக்கழக நூலகர்களின் நிர்வாகக் குழுவிற்கான அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அறிவித்தார்.
 
IMG 20241104 135129 800 x 533 pixel
 
1. தலைவர் - கலாநிதி; பிரதீபா விஜேதுங்க, நூலகர், கொழும்புப் பல்கலைக்கழகம்.
 
2. பொதுச் செயலாளர் - டி. ரமணன், 
மூத்த உதவி நூலகர்.
 
3. பொருளாளர் - கலாநிதி; நேலுகா கரண்நாகொட, மூத்த உதவி நூலகர்.
 
4. பிரதித் தலைவர் - சந்திமா வடாசிங்க, உதவி நூலகர்.
 
5. பதிப்பாசிரியர் - கலாநிதி; கல்பனா மணடுங்கே, மூத்த உதவி நூலகர்.
 
6. பயிற்சிப் பொறுப்பாளர் - கலாநிதி; சிரந்தி விஜயசுந்தர, மூத்த உதவி நூலகர்.
 
7. இணைய ஆசிரியர் - மதுசான் லங்காதிலக.
 
8. உதவி செயலாளர் - முதிதா அன்கும்புர, மூத்த உதவி நூலகர், காட்சி மற்றும் அரங்கேற்றக் கலைப் பல்கலைக்கழகம்.
 
புதிய நிர்வாகக் குழு சார்பில் - 
தலைவர் கலாநிதி; பிரதீபா விஜேதுங்க உரைநிகழ்த்தினார். 
 
புதிய பொதுச் செயலாளர் -  த. ரமணன் நன்றியுரை நிகழ்த்தினார்..
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web