(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை தேசிய மக்கள் சக்தியின்
வட்டாரத் தேர்தல் காரியாலயம் கல்முனையில் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தேசிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும், இலங்கை ஆசிரியர் சங்க தலைவரும், தேர்தல் வேட்பாளருமான ஆதம்பாவா அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், கல்முனை தேசிய மக்கள் சக்தியின் வட்டார குழுத்தலைவரும் செயற்பாட்டாளருமான முபாரக் மற்றும் வட்டார குழுச் செயலாளர் முபாரிஸ் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆசிரியர் சியாத், செயற்பாட்டாளர் பௌஸ் மற்றும் குழுத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.