2024 ஆம் ஆண்டுக்கான மத்திய
வங்கியாளர் அறிக்கை அட்டவணையில் (Central Banker Report Cards) அதிகூடிய தரங்களுடன் இடம்பிடித்த மத்திய வங்கி ஆளுநர்களின் பெயர்களை குளோபல் பினான்ஸ் சஞ்சிகை ஒகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க “A” தரத்தைப் பெற்ற மத்திய வங்கி ஆளுநர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.
அவருக்கான விருது இன்று வாஷிங்டன், டி.சி.யில் உள்ள தேசிய பத்திரிகை மன்றத்தில் நடைபெற்ற சிறந்த வங்கிகள் விருது - 2024 வைபவத்தில் வழங்கப்பட்டது.
