களுத்துறை ஹோம் என் பெமிலி
பவுண்டேசன் ஏற்பாடு செய்த மீலாது நபி விழா நிகழ்வு களுத்துறை கே.எம்.சி.சி.கேட்போர் கூடத்தில் களுத்துறை மாவட்ட அஹதியாக சம்மேளனத்தின் தலைவர் எம்.எச் எம். உவைஸ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஹாசிம் உமர் பெளண்டேசன் தலைவர் தொழிலதிபரான புரவலர் ஹாசிம் உமர், குறித்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒரு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியதுடன் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்தார். கலந்து சிறப்பித்த அதிதிகளையும் படங்களில் காணலாம்.


