1200 x 80 DMirror

 
 

போருக்கு பின்னர் ஊரு திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படலாம் என உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p

உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள் சிலர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்துள்ளனர். அப்போதே அந்த இராணுவ வீரர், ரஷ்யாவுக்கு திரும்பினால் கட்டாயம் கொல்லப்படுவோம் என்பதை அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட நாள் முதல், தாங்கள் இறந்துள்ளதாகவே கருதப்படுவதாகவும், சமீபத்தில் பெற்றோரை தொடர்புகொள்ள வாய்ப்பமைந்த போது, இறுதிச்சடங்குகளுக்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக ரஷ்ய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னர் சரணடைந்துள்ள வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள், அவ்வாறு நேர்ந்தால் சொந்த இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவது உறுதி என அந்த ரஷ்ய வீரர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்ய துருப்புகளிடம் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஒரு உக்ரேனிய இளம்பெண்ணை பாதுகாக்க முயன்ற ரஷ்ய அதிகாரி ஒருவர் சக வீரர்களாலையே சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு திட்டமிட்டபடி முன்னேறுவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் வீர வசனம் பேசினாலும், அவ்வாறான சூழல் இல்லை என்றே உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

பலர் மனக்குழப்பத்துடன் காணப்படுவதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் பலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போரைத் தவிர்க்கும் நம்பிக்கையில் சில ரஷ்ய துருப்புக்கள் வேண்டுமென்றே தங்கள் வாகனங்களின் பெட்ரோல் டேங்கில் துளையிட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மூன்று நாட்களில் முடிந்துவிடும் என கூறப்பட்ட போர் தற்போது இரண்டு வாரங்கள் கடந்தும் நீடிக்கிறது. ரஷ்ய தரப்பில் 12,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால், இதுவரை 498 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இதேவேளை தமது பிள்ளைகளை உக்ரைன் போர்க் களத்துக்கு அனுப்பவேண்டாம் என்று ரஷ்ய தாய்மாரிடம் உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைனிய ஜனாதிபதி வோலாடிமிர் ஸெலன்ஸ்கி தமது பிந்திய காணொளி பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் இருக்கும் இடத்தில் விழிப்புடன் செயல்படுமாறும் உக்ரைனிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

"ரஷ்ய தாய்மார்களுக்கு, குறிப்பாக கட்டாயப்படுத்தப்பட்டு பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்களுக்கு இதை மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன்.

உங்கள் குழந்தைகளை வெளிநாட்டு போருக்கு அனுப்பாதீர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

"அவர்கள் பயிற்சிகளுக்காக எங்காவது அனுப்பப்படுவார்கள் என்ற வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்” என்றும் அவர் கோரியுள்ளார்.
உக்ரைனில் தனது படைகளின் வரிசையில் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் இருப்பதை ரஷ்யா முதல் முறையாக கடந்த புதன்கிழமை ஒப்புக்கொண்டதையடுத்து,

அவர்களில் பலர் போருக்குப் பயிற்சி பெறாதவர்கள் என்றும் அவர்களில் பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாகவும் ரஸ்யா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி