உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி 4 மணிநேர வாக்குமூலத்தைப் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுத்

திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை சிறில் காமினி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைத்த பல தகவல்களை ஆதாரங்களுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதிக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட 12 பக்க கடிதத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பித்த அருட்தந்தை சிறில் காமினி, இன்று கையளிக்கப்பட்டுள்ள உண்மைகளை உன்னிப்பாக அவதானிப்பதன் மூலமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியை கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடையவுள்ளதாகவும், அதற்காக அணிவகுப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மக்களையும் அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி