ஸ்ரீ.ல.சு.கட்சியை மொட்டு கட்சிக்கு தாரை வார்க்க தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க சுட்டிக் காட்டியுள்ளார்

தனது தந்தையினால் ஆரம்பிக்கப்பட்டு தாயினால் பாதுகாக்கப்பட்ட, 1994ம் ஆண்டில் தன்னால் வெற்றிப் பாதைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் எதிர்காலம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பொன்றை பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாப்பதற்காக ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியாக அவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் மூத்த உறுப்பினரான குமார வெல்கமவுடன் இணைந்து மொட்டு கட்சியின் வேட்பாளருக்கு எதிராக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்திற்கு அக்கட்சியின் 90 வீதத்திற்கும் அதிகமான தொகுதி அமைப்பாளர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட சிலரிடையே நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாடுகளுக்கு சந்திரிகாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டுள்ளது.

ஸ்ரீ.ல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்கினாலும் பெரும்பான்மையான அக்கட்சியின் அமைப்பாளர்கள் சந்திரிக்காவுடன் இணைந்துள்ளதாகவும், குறைந்த ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இங்கு பேசப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி