நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நடுநிலையாக இருப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தீர்மானித்திருந்தாலும் அவரது மௌனத்தின் மூலம்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப் போவது யார் என்பது தெளிவாவதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள அமைச்சர் ஒருவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் theleader.lk இணையத்தளம் அவரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.  இதன் போது தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவு ஜனாதிபதி தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை முதலில் கூற வேண்டும். 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதும் அந்த தொகுதியில் மஹிந்தவே வெற்றி பெற்றார். அன்று அவர் 60 வீதத்தில் வெற்றி பெற்றிருந்தார். எனினும் கடைசியில் அந்த தேர்தலில் வெற்றி பெற்றது மைத்திரிபால சிரிசேனாவாகும்.

எனினும் ஜனாதிபதி தலைவர் பதவியிலிருந்து விலகி வழங்கிய சிக்னலை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை எல்பிட்டி தேர்தல் முடிவுகளில் நன்கு தெரிகின்றது. ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மொட்டுவுக்கு வாக்களிக்கவில்லை. வாக்களிக்கவும் மாட்டார்கள். குறைந்தது பத்து இலட்சம் ஸ்ரீ.ல.சு.கட்சி வாக்குகளாவது மொட்டுவுக்கு எதிராகவே ஜனாதிபதி தேர்தலில் விழும் என்பது மொட்டுக்கு மிக வாசியான எல்பிட்டியில் ஸ்ரீ.ல.சு.கட்சி உள்ளிட்ட கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளில் தெரிகின்றது” என்றார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி