ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விடுத்து தான் வேறு எந்தக் கட்சியுடனும் சேரப் போவதில்லை என்று,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தான் பிறந்தது, வளர்ந்தது எல்லதம் சுதந்திரக் கட்சியுடனேயே என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கட்சிக்காகத்தான் தான் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளானதாகவும் தான் உயிரிழக்கும் போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்துதான் உயிரிழப்பதாகவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாக்க அவர்களின் கொள்கைகளை மதிக்கும் தான், அந்தக் கொள்கைகளைப் பின்பற்றும் எந்தவொரு கட்சிக்கும் ஆலோசனை வழங்கத் தயங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, தற்போது நிலவும் இரு தேசிய பிரச்சினைகளான சிறுவர் போஷாக்கின்மையைப் போக்குதல் மற்றும் இனரீதியிலான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் இந்நாட்டின் மூத்த தலைவியான ஆலோசனை வழங்கவும் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தவறான கொள்கைகளைப் பின்பற்றுவதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்றுள்ளதென்றும் சுட்டிக்காட்டிய சந்திரிகா குமாரதுங்க, அக்கட்சியின் தற்போதைய தலைவர்கள் சுயநலவாதிகளாகக் காணப்படுவதோடு குறுகிய நோக்கங்களுக்காக கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்து வருகின்றனர் என்ற போதிலும், உண்மையான பண்டாரநாயக்க கொள்கைவாதிகள் இன்றும் அந்தக் கொள்கைகளைப் பாதுகாக்கப் பாடுபட்டு வருகின்றனர் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி