தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் பதினைந்து நாட்களில் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்

என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திர அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கான அட்டைகளை அவுஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி