நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் வாரங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போது அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக, மேற்படி சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்  போதே, அவர் இதனை தெரிவித்தார்.

“இன்று நாம் ஓளரவுக்கு அதிர்ஷ்டசாலிகள். தற்போது மருந்துப் பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் மாற்று மருந்து பயன்பாடு உள்ளது. ஒரு மருந்து இல்லை என்றால், மற்றொரு மருந்து உள்ளது.

“எனினும், எதிர்வரும் இரு வாரங்களில் உரிய முறையில் இதை நிர்வகிக்கவில்லை என்றால், நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும், மருந்து இல்லாமல் மரணிக்கக்கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி