நாட்டின் உள்ளே ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய அரசியல் நெருக்கடி மூலமாக யாவும் நெருக்கடிக்கு உட்பட்டு முடிந்துவிட்டது.
அந்த நெருக்கடியை ஏற்படுத்தியது ஏப்ரல் 3ஆம் திகதி போராட்டக்காரர்கள் என்பது முற்றுமுழுதான தவறாகும். நெருக்கடி மூலமாக மக்கள் போராட்டம் கட்டி எழுப்பப்பட்டது ஒழிய போராட்டம் மூலமாக நெருக்கடி கட்டி எழுப்பப்படவில்லை.
 
 நாளை அரசாங்கம் பலாத்காரமாக இந்த போராட்டத்தை ஒழிக்க செயற்படுமாயின் மீண்டும் இன்னுமொரு இடத்தில் இப்போராட்டம் ஏற்படும். அதற்குத் தேவையான அழுத்தம் உயர்ந்த பட்சமாக ஏற்படுத்தப்பட்டு விட்டது. தற்போது எங்களுக்கு பார்க்க வேண்டி இருப்பது அது வெடித்து சிதறுவதனையே.
 இருப்பினும் ஏப்ரல் 3ஆம் திகதிய போராட்டக்காரர்கள் இந்த இடத்தில் ஒரு விடயத்தை செய்துள்ளார்கள். இந்த அரசாங்கத்தை போன்று எதிர்க்கட்சியையும் சுவருக்கு சாய்த்துள்ளார்கள். தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்தின் முன் மண்டியிட்டு முடிந்துவிட்டது. கடந்த 11ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மகிந்தவும் மோசமான நிலைக்கு உள்ளாகி விட்டார்
இந்தப் போராட்டத்தினால் அரசாங்கம் எதிர்க்கட்சி போன்று சுயாதீனமாக செயற்படுவோர் அனைவரும் நெருக்கடிநிலைக்கு உட்பட்டு இருக்கின்றது. எவ்வாறிருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள்சக்தி, ஜேவிபி நேரடியாக அரசாங்க எதிர்ப்பை காட்டுகின்றது. 
 
இருப்பினும் அது போலியானது என்பது கடந்த வாரம் நிரூபிக்கப்பட்டு விட்டது.அவசரகால சட்டத்திற்கு சுமந்திரன் வாக்கெடுப்பை கோரியபோது அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி ஒத்துழைப்பு வழங்கவில்லை. உண்மையில் அவசரகாலச்சட்டம் சட்டத்திற்கு பிணைப்பொன்று காணப்பட்டிருந்தால் அந்த இடத்தில் சுயாதீனமாக செயற்பட்டவர்கள் தொடர்பில் நிலைப்பாட்டை அறிந்திர முடிந்திருக்கும். 
 
சுமந்திரனுக்கு இருந்த அந்த இயலுமை அனுரகுமார,சஜித்திற்கு காணப்படவில்லை. அதனால் இன்னும் பொய்யான பித்தலாட்டங்களை குழந்தை போன்று செல்வதற்கான சந்தர்ப்பம் சுயாதீனமாக செயற்படக்கூடியவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இவர்கள் மேற்கொண்ட இந்த தாரைவார்ப்பு தொடர்பில் ரட்டே ரால வெறுமனே இருக்க போவதும் இல்லை. 
 
உண்மையில் சுயாதீனமாக செயல்படுகின்றோம் என்று அறியப்படுகின்ற அந்த உறுப்பினர்களுக்கு பெரிய கோழைத்தனமான விடயங்களை ராஜபக்சக்கள் மேற்கொண்டுவிட்டனர். இருப்பினும் அந்த இடத்திற்கு சேர்வதற்குரிய அரசியல் பிச்சை கேட்பவர்களாக சிலர் மாறியிருக்கிறார்கள். சுயாதீன அணியினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பின்புறமாக நிகழ்ச்சி நிரலை மேற்கொள்ளப்படுகின்ற கலந்துரையாடலாக அந்த கலந்துரையாடல் மாறிவிட்டது.
விமல் இக்கலந்துரையாடலில் குறிப்பிட்டது ஜயந்த கெட்டகொட, சஞ்சீவ எதிரிமான்ன,ரேனுக பெரேராவும் தங்களது உறுப்பினர்களை எடுப்பதற்கு இரவிலேயே சென்று வீடுகளுக்கு பாய்கின்றார்கள். அந்த வழிநடத்தலில் இருப்பது பெசில் என்றும் குறிப்பிட்டார்கள். 
 
அவ்வாறாயின் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்வது பெசில் முன்னிலையிலா? விமல் அரசியல் ரீதியாக அண்ணன் என்று ரட்டே குறிப்பிட்டது அதனால்தான். இன்னும் மஹிந்த மற்றும் கோட்டாபயவின் கோழைத்தனமான விடயங்களை சொல்லுவதற்கு விமலுக்கு நாக்கு நீளவில்லை. ராஜபக்சக்கள் இன்று செய்கின்ற அனைத்து கோழைத்தனமான விடயங்களையும் மஹிந்த முன்னிலையிலேயே செய்கின்றார்கள்.இவர்கள் என்ன குழந்தையா?மஹிந்த குழந்தை அல்ல?விமல் குழந்தையாக இருப்பதற்கு மஹிந்த என்ன செய்வது? இன்னும் மஹிந்த கோட்டாபயவை பாதுகாப்பதற்கே விமலும் உடந்தையாக இருக்கின்றார். 
 
தற்போது குறிப்பிடுவது இது ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த ,ரோஹித்தவின் வேலையாம். உண்மையில் அந்த மூன்று பேரும் விமல் குறிப்பிடுகின்ற அந்த வழிநடத்தலில் உள்ளார்கள். இருப்பினும் விமல் தெரிந்துகொள்ள வேண்டும் அவர்கள் வழி நடத்துவது ராஜபக்சக்களுக்காக என்று. ராஜபக்ஷக்கள் விமலை தாக்கி விரட்டியடித்த பொழுது செய்துகொண்டிருந்த அடிமைத்தனமான வேலைகளையே தற்போதும் செய்கின்றார்கள்.
 
இவர்கள் பெசிலின் அடிமைகள் மாத்திரமல்ல. அவர்கள் முன்னால் விமல் இருந்த ராஜபக்ச ரெஜிமேன்டின் அடிமைகள். அன்று ஒன்றாக இருக்கின்ற பொழுது விமலும் கீழ்த்தரமான வேலைகளை செய்திருந்தார். விமல் அன்று ராஜபக்சக்களுடன் இணைந்து இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளை யாருக்கு செய்தது? உண்மையில் மஹிந்தானந்த,ஜோனி,ரோஹித்த போன்றோர் அதனை ச அதனை செய்தது வெளி நபர்களுக்கு, இருப்பினும் அன்று விமல் அவற்றை செய்தது தங்களுடைய கட்சியினுடைய நபர்களுக்கு.
 
 விமல் மேற்கொண்ட அந்த கீழ்த்தரமான வேலைகளை இன்று ரட்டே ரால வெளிப்படுத்துவார். அதனை விமலும் மஹிந்தவும் பெசிலும் ஒன்றாக இருக்கும்போது கேட்க வேண்டும். கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி கிடைக்க வேண்டிய வேட்பாளர் எண்ணிக்கையை குறைக்க முற்படுகின்ற போது ராஜபக்ஷவிடம் விமல் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார். 
 
அனுராதபுரத்தை நீக்க வேண்டாம் நீங்கள் நீக்குவதாக இருந்தால் நுவரெலியாவை நீக்குங்கள் என்று.அதாவது இன்றைய தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸவின் வேட்பாளர் பதவியை.விமலுக்கு தேவையாக இருந்தது அனுராதபுரத்திற்கு ஒரு நடிகரை நியமித்து வீரக்குமாரவை தோற்கடிப்பதற்காக.அதற்கு விமல் பலிகொடுத்தது அன்று ஜேவிபி இலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் தன்னுடன் வருகை தந்த நிமல் பியதிஸ்ஸவை.
 
உண்மையில் விமலுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கியது மஹிந்த. அதனால் இன்று விமல் மஹிந்த மேற்கொள்ளுகின்ற கீழ்த்தரமான வேலையிலும் பார்க்க கீழ்த்தரமான வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றார்.
விமல் குறிப்பிடுவது பெசில் இன்னமும் அந்த போட்டியை கைவிடவில்லை என்று.ரட்டே ரால குறிப்பிடுவது பெசில் போன்று விமலும் இன்னமும் அந்த போட்டியை கைவிடவில்லை என்று. இருவரும் ஒரே வகையான விளையாட்டுதான் இருப்பினும் இரண்டு வகையான முறைகளில் முகம் கொடுப்பது.
 
பெசில் செய்வது விமல் இல்லாத ராஜபக்சக்கள் இருக்கக்கூடிய ஒரு விளையாட்டை ஏற்படுத்த. விமல் மேற்கொள்வது பெசில் இல்லாத விமல் உள்ளிட்ட ராஜபக்சக்கள் இருக்கக்கூடிய ஒரு விளையாட்டை இயக்க ஆகும். ஒரு விளையாட்டு என அவர் குறிப்பிடுவது அவர்கள் பாதுகாப்பாக இருக்க கூடிய ஒன்றாகும். அதனால் இந்த விளையாட்டில் இரண்டு வழிமூலமும் ராஜபக்சக்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
 
 உண்மையில் உங்களுக்கு ஒரு ப கேள்வி எழுகின்றது. விமல்ஏன் இவ்வளவு உணர்வுபூர்வமாக ஆர்வம் காட்டிக் கொள்வது என்பது? உண்மையான விடயம் என்னவென்றால் விமல் அதிகமான களவுகளை மேற்கொண்டது மஹிந்தவின் கீழ் ஆகும். மகிந்த விமலுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் மூலம்தான் விமல் பொறியியல் கூட்டுத்தாபனத்தை சுத்தப்படுத்தியது. 
 
அந்த இடத்திலேயே 4000 மில்லியன். விமல் சிறைவாசம் சென்ற சந்தர்ப்பத்தில் தேசிய சுதந்திர முன்னணி அரசியல் சபைக்கு அதனை வெளிப்படுத்தியது தற்போது இருக்கக்கூடிய விமலின் ஆலோசகர்,அது பிரிக்கப்பட்ட முறையை சொன்னது விமலுடன் பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய தேசிய சுதந்திர முன்னணியின் தட்டை இருக்கக்கூடிய உறுப்பினர் தான். இருப்பினும் விமலுக்கு அந்த சுதந்திரம் பெசில் வலுவாக இருக்க கூடிய இந்த அரசாங்கத்தின் உள்ளேயே காணப்படவில்லை.
 
இந்த அரசாங்கத்தின் கீழ் விமல் களவுகளை மேற்கொண்டார்கள். கொள்ளை அடித்தார்.இரத்தினபுரி ஹெரனியாவக இரத்திக்கல் கொள்ளையடித்தலை விமலும், லொஹானும் ஒன்றாக மேற்கொண்டார்கள்.அதற்கு தற்பொழுது களவு எடுத்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள். அதனால் ரட்டே ரால குறிப்பிடுவது ராஜபக்சக்கள் மாத்திரமல்ல விமல் உள்ளிட்ட அனைவரும் மேற்கொண்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்ள வேண்டும். அது எதிர்க்கட்சிக்கும் ஏற்புடையது.
 
 அன்று விமல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விமல் பல கோடி ரூபா நிதியை ஈட்டியதை விசாரித்த போது பதில் வழங்க முடியவில்லை. அதற்கு விமல் குறிப்பிட்டது வெளிநாட்டில் இருக்கக்கூடிய அவருடைய ஒரு உறவினரை. அந்த உறவினருமல இந்த கடிதத்தை பார்த்தார். சரி முடியும் என்றால் இல்லை என்று சொல்லுங்கள். அந்த காலத்தில் அவருக்கு இலங்கைக்கு வருகை தர முடியாமல் இருந்தார். வருகை தந்தால் இங்கு உடனடியாக விசாரணைக்குட்படுத்துவதனால் ஆகும்.தற்போது வந்திருக்கலாம். 
அதனால் எப்போதும் விமல் ராஜபக்சவுக்கு எதிராக செல்வது கிடையாது. தற்போது இந்த நாட்டினுடைய அரசியல் வகை இரண்டாக ஏற்படுத்தப்பட்டு முடிந்துவிட்டது. அது ராஜபக்சவுக்கு சார்பானது. ராஜபக்ஷக்களுக்கு எதிரானது ஆகிய இரண்டு அணிகள் தான். அவ்வாறு இல்லை என்றால் களவுக்கு சார்பானது, சார்பற்றது ஆகிய அணிகள் என்பதுதான். இதற்குத்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இரண்டு அணிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
உண்மையில் அந்தப்பிணைப்பை ஏற்படுத்தியது ஏப்ரல் 3ஆம் திகதி போராட்டம்தான். அதனால்தான் இந்த அரசியல் தற்பொழுது சுயாதீனம் என்று குறிப்பிடக் கூடிய ஒரு விடயம் இல்லை. சுயாதீனம் என்று குறிப்பிடுவது ஒருவகையில் ராஜபக்சகலகளை பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு விடயமாகும்.சுயாதீனம் என்று ராஜபக்ஷவை பாதுகாக்கின்ற சக்திகளுக்கு எதிராக இந்த நாட்டினுடைய மக்கள் எழல் வேண்டும். 
 
தற்பொழுது நாட்டிலேயே சுயாதீனம் என்று சொல்லக்கூடிய உறுப்பினர்கள் இருக்க முடியாது. ராஜபக்சக்களுக்கு சார்பாக இருக்க வேண்டும் இல்லை என்றால் ராஜபக்சக்களுக்கு எதிராக இருத்தல் வேண்டும். இன்னமும் சுயாதீனம் என்ற சொல்லக்கூடிய அந்த வசனத்தை பயன்படுத்த கூடாது. உண்மையில் ரட்டே ரால பொறுப்புடன் குறிப்பிடுகின்றார். விமல் மேற்கொள்வது 20 நிறைவேற்றி மக்களை ராஜபக்ஷக்களுக்கு தாரைவார்த்தது போன்ற ஒரு வேலையைத்தான். 
 
உங்களுக்கு வேண்டிய அளவு ரட்டே ராலவுக்கு பேசக் கூடியதாக இருக்கும். இருப்பினும் இந்த அரசியல் செயற்பாடுகள் மூலமாக நாட்டை அழிவுப் உட்படுத்துவதற்கு நீங்கள் உடந்தையாக இருக்க வேண்டாம்.ரட்டே ரால தற்பொழுது குறிப்பிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு வசனத்துக்கும் அவர் பொறுப்புடையவராய் இருக்கின்றார். 
 
சுயாதீனம் என்று சொல்லக்கூடிய விமல் போன்றவர்கள்தான் மக்கள் போராட்டத்திற்கு பின்னால் தாக்குகின்றனர். நீங்கள் நன்றாக பாருங்கள் விமலின சமூக ஊடகத்தில் என்ன செய்கின்றார் என்று. அந்த போராட்டத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ என்பவர் விமலின் பிக்குகள் முன்னனியின் ஏற்பாட்டாளராக இருக்கின்றார்.
 
அதனால் ரட்டே ரால சத்தாதிஸ்ஸவிடம் குறிப்பிடுகின்றார். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் அல்லவா புளுமோட்ட ஓய்வு விடுதியில் துரத்திய விதம். மக்கள் போராட்டத்திற்கு எதிராக நின்று அவற்றை எழுத வைக்க வேண்டாம். அந்த தினங்களில் சத்தாதிஸ்ஸ விமலின் ஒருங்கிணைப்புச் செயலாளர்.
 
ரட்டே ரால தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான செயலாளர்.அமைச்சரின் பலத்தை பயன்படுத்தி மேற்கொண்ட வேலைகளை நிறுத்தி ஓய்வு விடுதியிலிருந்து அ விரட்டியடித்தது ரட்டே ரால. தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான செயலாளர் பதவியை பயன்படுத்தி அதனை ரட்டே ரால மேற்கொண்டார். அந்த கதையை சத்தாதிஸ்ஸ விமலிடம், ஜயந்த சமரவீடம் போய் கேட்டுக் கொள்ளுங்கள் என்று ரட்டே ரால குறிப்பிடுகின்றார். 
 
நீங்கள் நன்றாக பாருங்கள் மக்கள் போராட்டத்தை பௌத்த எதிர்ப்பு என்று ஒரு பொறிமுறையை ஏற்படுத்துவது யாரென்று. அதனை மேற்கொள்வது அரசாங்கம் மற்றும் விமல் அணியினர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விமல் அரசாங்கத்துடன் இணங்கி போகின்றார். அதனால் இந்த செயற்பாட்டை இன்னும் தாரைவார்க்காமல் பார்க்காது இருப்பது நாட்டு பிரஜைகளின் முக்கிய பொறுப்பாகும். உண்மையில் தற்பொழுது விமலின் ஏமாற்று கதைகளுக்கு ஏமாந்து கொண்டு செல்லுவது தயாசிறி போன்ற மடையர்கள் மாத்திரமே.
 
அவ்வாறாயின போய் வருகின்றேன்,
கடவுள் துணை வெற்றி கிட்டட்டும்,
இப்படிக்கு,
ரட்டே ரால.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி