1200 x 80 DMirror

 
 


ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்ட புத்த பிக்குகள் தலைமையிலான பயணம் புதிய நகர மண்டபத்திற்கு அருகில் நிறைவடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டம், காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நேக்கில் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


அந்தப் பயணத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர் புதிய துறவிகள். நாங்கள் பெற்ற காணொளிகள் உண்மையானவை என்றால், புதிய துறவிகளின் ஒரு சிறிய குழு ஊர்வலத்தை வழியிலேயே கைவிட்டுச் சென்றது.
ராஜபக்ச நிகாயா ஊர்வலம் காலி முகத்திடலுக்குச் சென்றிருந்தால் அது இன்னும் பல பிக்குகளுக்கு பேரிடியாக இருந்திருக்கும்.

கடந்த 66 வருடங்களாக, இலங்கையில் முக்கிய கட்சிகளின் அரசியல்வாதிகள் மதம் மற்றும் மொழி மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

1956 ஆண்டு முதல் மதம், மொழி ஆகிய இரண்டு பேதங்களும் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மதம் பௌத்தம். எதிரான வார்த்தை கத்தோலிக்க ஆக்கிரமிப்பு. மொழி சிங்களம். எதிர் சொல் தமிழ் ஆகும்.

இதனை கொண்டே பெரும்பான்மை மக்களின் வாக்குகள் சூரையாடப்பட்டு ஒரு குறிப்பிட்ட நபர்களால் அரசியல் இலாபம் ஈட்டப்பட்டு வருகின்றது. நாட்டின் சொத்துக்களும் சுரண்டப்பட்டு நாடு இன்ற பாரிய பொருளாதார நெறுக்கடியில் சிக்குண்டுள்ளது.

2009ஆம் ஆண்டு முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்களை முன்னிருத்தி பெரும்பான்மை மக்களின் தேசிய உணர்வை தூண்டிவிட முடியாத நிலை ஏற்பட்டது. 

இதன் பின்னரே புத்த பிக்குகள் மசூதிகளுக்கு அனுப்பப்பட்டார்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் 1956 இல் சிங்களத்தை அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்வதை ஆதரித்த ஒரு சமூகம். எனினும் அவர்களின் நிலை பிற்காலத்தில் மிகவும் மோசமானது. அவர்களை பிரதிப்பளிக்கும் உடைகளையும் கூட அணிய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சித்திரவதை மாத்திரைகள் வைத்தியர் சஃபி மூலம் சிறிது தூரம் சென்றது. ஈஸ்டர் படுகொலையும் அந்த அரசியலின் ஒரு பகுதி என்பதை உலகம் இப்போது புரிந்து கொண்டுள்ளது.

இந்த ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்துடன் கொழும்பு காலி முகத்திடலில் கூடியிருந்த மக்கள் ஒரு அரசியல் இயக்கம். இது சிங்கள தமிழ் அல்லது முஸ்லிம் மோதல் அல்ல. இது பசி மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான மக்களின் எழுச்சி போர்.
அங்கு யாரும் ஆயுதம் ஏந்தவில்லை வேண்டுகோள்களை மட்டுமே முன்வைக்கின்றனர். அந்த கோரிக்கையை சுருக்கமாக கூறுவது நல்லாட்சிக்கான வேண்டுகோள்.

நாட்டின் பொருளாதாரச் சீர்கேடுகளுக்கு அரசியலே காரணம் என்று புதிய நிதியமைச்சர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார். மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் கூற்றுப்படி, இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை வடக்கில் ஆனையிறவு வரை பயணித்திருக்க பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் சுதந்திர சதுக்கத்திலிருந்து காலி முகத்திடலில் வரைகூட பயணிக்க முடிவடையவில்லை. பாதியிலேயே நிறுத்தப்பட்டது. காரணம் அது சிங்கள பௌத்த உரிமைகளை இலக்காகக் கொண்டது.

பௌத்த மத நூல்களான திரிபிடகத்தில் எங்கும் சிங்கள பௌத்தர்கள் என்று குறிப்பிடப்படவில்லை.
நேற்று காலி முகத்திடலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த மக்கள் மதம் அல்லது கோத்திரத்தின் பெயரால் கூடவில்லை.

பசியின் அநீதிக்கு எதிராக மனித பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அவர்கள் அங்கு கூடியுள்ளனர் அந்த மக்களிடம் அரசியல் இல்லை. அவர்களிகளிடம் மனிதாபிமானம் மட்டுமே இருந்தது.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியலால் வெறுப்பாளர்களாக மாற்றப்பட்ட இலங்கை இளைஞர்களின் பலம் அங்கு குவிந்தது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நேர்ந்த பெரும் சோகம் என்ற புலம்பலும் இருந்தது. அந்த மனித உறுதியின் காரணமாகவே நாட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆட்சியாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பெரஹரா இலக்கை இழந்தது.
எவ்வாறாயினும் மீண்டும் ஒரு குழுமை மக்கள் போராட்டத்தில் இறக்கி கலவரத்தை ஏற்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் போராட்டம் வெற்றி கொள்ளுமா? ராஜபக்ஷ அரசு வீடு செல்லுமா? அல்லது மக்கள் விரட்டியடிக்கப்படுவார்களா? சர்வதேச தலையீடு எவ்வாறு இருக்கும் என்பது உள்ளிட்ட பலகேள்விகள் எழுகின்றன.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி