இந்த நாட்களில் மரக்கறி விலைகள் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் தம்புள்ளையில் அரசினால் நிர்மாணிக்கப்பட்ட உபரி காய்கறி சேமிப்புக் குளிர்சாதன வசதி கைவிடப்பட்டமையால். காய்கறிகள் அழுகி குளிருக்கு முளைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்புள்ளையில் கிடைக்கும் உபரியான மரக்கறிகளை சேமித்து, விலை ஏற்றம் ஏற்படும் காலங்களில் நியாயமான விலையில் விற்பனை செய்யும் வகையில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் ஊடாக 113 இலட்சம் ரூபா செலவில் இந்த குளிர்பதனக் கிடங்கு நிர்மாணிக்கப்பட்டது.

ஆனால் முறையான ஆய்வு மற்றும் தரம் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி தற்போது குளிர்பதன கிடங்கு கைவிடப்பட்டுள்ளது. இந்த குளிர்பதனக் கிடங்கை நிர்மாணிப்பதற்கு 113 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக செலவானது.

குளிர்பதனக் கிடங்கு கைவிடப்பட்ட போதிலும் 2018-2019 காலப்பகுதியில் தம்புள்ளையில் உள்ள விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் உபரி பூசணிக்காயை கொள்வனவு செய்து அவற்றை முறையாக சேமித்து வைக்காததால் அரசாங்கத்திற்கு சுமார் 15 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

(தேசய)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி