இரசாயண உரம் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியதன் பின்னர் அடுத்த பெரும்போகத்திற்காக இந்தியாவின் நெனோ உரத்தை இறக்குமதி செய்ய அவசரமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெரும்போகத்திற்குத் தேவையான நைட்ரஜன் உரம் என்ற வகையில் இந்தியாவின் நெனோ தொழில்நுட்பத்தினால் உப்பத்தி செய்யப்பட்ட திரவ உரத்தை எவ்வித தொழல்நுட்ப மதிப்பீடுமின்றி இறக்குமதி செய்ய அமைச்சரவை நேற்று (18) அனுமதியளித்துள்ளது.

முதலாவது திரவ நைட்ரஜன் உரத்தை விமான மூலம் கொண்டுவர அமைச்சரவை அனுமதித்துள்ள போதிலும், இந்த இரசாயணத்தினால்; சுற்றுசசூழலுக்கு ஏற்படும் பாதிப்பு சம்பந்தமாக எவ்வித ஆய்வும் இல்லாமல் இந்நாட்டு பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்த முடியுமா என்பது பிரச்சினையாகுமென சுற்றுச் சூழல்வாதிகள் கருதுகின்றனர்.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சமர்ப்பித்த அமைச்சரவை நிருபத்தின்படி, இறக்குமதி செய்யப்படும் இந்த உரம் பெரும்போகத்தில் ஒன்பது லட்சம் ஹெக்டயார் வயல்களுக்கு போதுமானதாக இருக்கும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்