நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் திங்கட்கிழமை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளார். இதன்படி, அவர் மத்திய வங்கி ஆளுநராக அடுத்த வாரம் நியமிக்கபடவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாபதி வேண்டிக் கொண்டதன் பேரில் தான் பா.உறுப்பினர் பதவியிலிருந்த விலகப் போவதாக இன்று (11) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் ஆளுநராக தற்போது செயற்படும் டப்.டீ. லக்ஷ்மன் தான் ஓய்பெறத் தீர்மானித்திருப்பதாக நேற்று அறிவித்திருந்தார். தான் கடினமாக உழைத்த போதிலும் தனது நிர்வாகத்திற்கு வெளியிலுள்ள சக்திகளினால் எதிர்ப்பார்த்த பலனை பெற்றுக் கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்ட மத்திய வங்கி ஆளுநர் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி