ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட
தேர்தல்கள் தொடர்பான ஆராய்வுக் குழுவின் கலந்துரையாடல்களில் பசில் ராஜபக்க்ஷ இரண்டு தடவைகள் கலந்துகொண்டுள்ளார்.
இருப்பினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட நிமல் லான்சவின் கூட்டணியின் பிரதிநிதிகள் இரு குழுக் கூட்டங்களையும் புறக்கணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கூடி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாகவும் அந்த கூட்டத்துக்கு ராஜபக்ஷக்கள் வந்தால் தமது குழு பங்கேற்காது என்றும் நிமல் லான்சவின் கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறையில் கடந்த 8ஆம் திகதி நிமல் லான்சாவின் கூட்டணித் தலைவர்களும் ஸ்ரீலங்கா கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவும் கலந்துரையாடியுள்ளனர்.
ராஜபக்க்ஷகள் கலந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில்லை என தனது கூட்டணியில் உள்ள சுமார் 40 எம்பிக்கள் தீர்மானம் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா அங்கு தெரிவித்துள்ளார்