30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மின்சார பாவனையாளர்களுக்கு உதவுவதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியை 06 மாதங்களுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

130 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் 05 இந்திய பிரஜைகளும் 05 இலங்கையர்களும் வட மேல் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்க்கும் மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தாமரை கோபுரம் அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு பிரவேசிக்கும் நுழைவுச்சீட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச்சீட்டு ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மொழி புறக்கணிப்பு

இந்த நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் பிரஜைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 500 ரூபா கட்டணமும், வரையறையில்லா அடிப்படையில் 2000 ரூபா கட்டணமும் அறவீடு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு உள்நுழைவு கட்டணம் 20 டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் விமர்சனம்

இந்த நிலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் சீனப் பிரஜைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் இந்த நுழைவுச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் இவ்வாறான ஓர் நுழைவுச்சீட்டு மெய்யாகவே விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதுவரையில் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்